நாளை விவசாய கருவிகள் இலவச பழுது நீக்க முகாம்
மதுரை : வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாய கருவிகளுக்கான இலவச பழுதுநீக்க முகாம் நாளை (செப்.4) காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை ஒத்தக்கடை அருகேயுள்ள நெல்லியேந்தல்பட்டி வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலக அரசு இயந்திர கலப்பை பணிமனையில் நடக்க உள்ளது.விவசாய கருவிகளை இயக்குதல் பராமரித்தல், அனைத்து பழுது சேவைகளும் இலவசமாக செய்யப்படும். உதிரிபாகங்கள் மாற்ற வேண்டுமெனில் அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் தனியாரின் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்கள், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர்களிடம் நேரடியாக விளக்கம் பெறலாம்.