இலவச பயிற்சி முகாம்
திருப்பரங்குன்றம் ; திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான ஆரி எம்பிராய்டரி இலவச பயிற்சி முகாம் செப்., 10ல் தொடங்கி ஒருமாதம் நடக்கிறது. 18 - 45 வயது பெண்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம். விருப்பம் உள்ளவர்கள் செப்.,9க்குள் 94456 00561ல் அல்லது இமெயில் mdu.gmail.comல் முன்பதிவு செய்ய வேண்டும். ஆதார் நகல், ரேஷன் ஸ்மார்ட் கார்டு நகல், இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோவுடன் வர வேண்டும். 100 நாள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினர், கிராமப்புற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இயக்குனர் சுந்தராசாரி தெரிவித்தார்.