உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச பயிற்சி நிறைவு விழா

இலவச பயிற்சி நிறைவு விழா

பாலமேடு: மேட்டுப்பட்டியில் சந்திரபாண்டி விளையாட்டு கழகம் சார்பில் ஒரு மாத கோடைகால இலவச வாலிபால் பயிற்சி முகாமின் நிறைவு விழா நடந்தது.தி.மு.க., ஒன்றிய செயலாளர் தன்ராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், மாணவரணி அமைப்பாளர் ஆதிசங்கர், எஸ்.பி., (ஓய்வு) பாஸ்கர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., வெங்கடேசன் சான்றிதழ் வழங்கினார். மாவட்ட வாலிபால் கழக சேர்மன் ராஜேந்திரன், தலைவர் சந்திரசேகர், செயலாளர் ராகவன் பங்கேற்றனர். விளையாட்டு கழக நிர்வாகிகள் சந்திரபாண்டி, சரவணன், பார்த்தசாரதி, பாலகிருஷ்ணன் முகாமினை ஒருங்கிணைத்தனர். சுற்றுவட்டாரம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டத்தினரும் பயிற்சி பெற்றனர். தங்குமிடம், உணவு, சீருடை இலவசமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை