மாணவருக்கு பரிசு
திருமங்கலம்; திருமங்கலம் தென்றல் அரிமா சங்கம், மதுரை முத்தமிழ் மன்றம், திருமங்கலம் இலக்கிய பேரவை, கிளை நுாலக வாசகர் வட்டம் சார்பில் திருமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கும் 200 மாணவர்களுக்கு எழுது பொருட்கள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது. புலவர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட நுாலக அலுவலர் இளங்கோ, நகராட்சி துணைத் தலைவர் ஆதவன், தென்றல் அரிமா சங்க பட்டய தலைவர் செந்தில்நாதன், செயலாளர் சசிகுமார், தலைவர் சரவணகுமார் பொருளாளர் குழந்தை வேலு உட்பட பலர் பங்கேற்றனர்.