உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வைக்கோல் விலை உயர்வு கால்நடை வளர்ப்போர் தவிப்பு

வைக்கோல் விலை உயர்வு கால்நடை வளர்ப்போர் தவிப்பு

பேரையூர்: பேரையூர் பகுதியில் தட்டுப்பாடு காரணமாக வைக்கோல் விலை உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். கால்நடை வளர்ப்போரில் பசுமாடு வளர்க்கும் விவசாயிகள், மொத்தமாக வைக்கோல் கட்டுகளை வாங்கி வைத்து பயன்படுத்துவர்.ஒரு ஏக்கருக்கு 50 கட்டு வைக்கோல் கிடைக்கும். நெல் ரகங்களை பொறுத்து இது மாறலாம். இப்பகுதியில் சமீபத்தில் நெல் அறுவடை பணி முடிந்துள்ளது. கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்ததால் விலை உயர்ந்துள்ளது. கேரளாவில் நெல் சாகுபடி இல்லாததால் தமிழகத்தில் இருந்தே வைக்கோல் கொண்டு செல்லப்படுகிறது.ஒரு லாரியில் அதிகபட்சம் 165 கட்டுகள் ஏற்றலாம் என்பதால் வியாபாரிகள் வைக்கோல் கொள்முதலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் வரை ஒரு கட்டு ரூ. 80 க்கு விற்றது. தற்போது ரூ.120 க்கு விற்பனையாகிறது. பேரையூர் பகுதியில் கால்நடை வளர்ப்போர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.கேரளா வியாபாரி கூறுகையில், ''தமிழகத்தில் ரூ.120 க்கு கொள்முதலாகும் வைக்கோல் கட்டுகள், கேரளாவில் 250 ரூபாய்க்கு விற்பனையாகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை