உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவமனைகளில் தீயணைப்பு கருவிகள் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மருத்துவமனைகளில் தீயணைப்பு கருவிகள் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை : அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் தீயணைப்பு கருவிகள் இடம் பெற தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 2022 டிச.,16ல் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. உயிர்ச்சேதம் இல்லை. அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் தீயணைப்பு கருவிகள் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும். எச்சரிக்கை அலாரம் அமைப்பு இருக்க வேண்டும். அவசரநிலையை கையாள ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தீப்பொறிகள் ஏற்படாமல் தடுக்க மின் சாதனங்களை சரியாக பராமரிக்க வேண்டும்.அரசு மருத்துவமனைகளில் தரமான உணவு, குடிநீர், படுக்கை, கழிப்பறை வசதி செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுதாரர் பொத்தாம் பொதுவான காரணங்கள் அடிப்படையில் மனு செய்துள்ளார். போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை