உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிடாமுட்டு போட்டி அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு 

கிடாமுட்டு போட்டி அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: பாரம்பரிய கிடா முட்டுவோர் நலச் சங்கம் தலைவர் பிரகாஷ். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: உசிலம்பட்டி அருகே கவுண்டன்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆக.,18 ல் கிடாமுட்டு போட்டி நடத்த உள்ளோம். இது பழங்காலத்திலிருந்தே ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அனுமதி கோரி உசிலம்பட்டி தாசில்தார், ஆர்.டி.ஓ., விற்கு மனு அளித்தோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: இது ஒரு கலாசார நிகழ்வு என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. நிபந்தனைகளுக்குட்பட்டு நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க தாசில்தார் 2 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ