உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குறுவை நெல் சாகுபடியில் பூச்சித் தாக்குதல்

குறுவை நெல் சாகுபடியில் பூச்சித் தாக்குதல்

மதுரை : 'மதுரையில் குறுவை நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழு, இலைப்பேன் தாக்குதல் பரவுவதால் விவசாயிகள் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்' என வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: இலைப்பேன் தாக்குதலின் அறிகுறியாக இலைகள் சுரண்டப்பட்டு சாறு உறிஞ்சப்பட்டிருக்கும்.தாக்கப்பட்ட நாற்றுகள் மஞ்சள் அல்லது வெள்ளை நிற வரிகளுடன் இலையின் நுனிகள் சுருண்டு வாடி விடும். தாக்குதல் தீவிரமானால் இலைகள் உதிர்ந்து மணிகள் பூர்த்தியாகாது. எக்டேருக்கு 600 மில்லி பாஸ்போமிடான் 40 எஸ்.எல்., அல்லது 1000 மில்லி அசிபேட் 75 சதவீத எஸ்.பி., அல்லது 100 கிராம் தையோ மெத்தாக்ஜம் 25 சதவீத டபிள்யூ.ஜி., கலந்து பயன்படுத்தவேண்டும்.இலைச்சுருட்டுப்புழு தாக்கிய நெற்பயிரின் இலைகள் நீளவாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். தாக்குதல் தீவிரமடையும் போது நெல் வயல் வெண்மை நிறத்தில் காய்ந்ததுபோல் காட்சியளிக்கும். பயிர் நடவு செய்து 37, 44 மற்றும் 51 நாட்களில் டிரைக்கோ கிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணிகளை 5 சி.சி. அளவில் 3 முறை நெற்பயிரில் கட்டி விட வேண்டும். ஒரு எக்டேருக்கு ஒரு லட்சம் முட்டை ஒட்டுண்ணி தேவைப்படும். எக்டேருக்கு 5 சதவீத வேப்பங்கொட்டைச்சாறு அல்லது 3 சதவீத வேப்பெண்ணெய் தெளிக்கலாம். பூச்சிக்கொல்லியாக இருந்தால் எக்டேருக்கு 1000 மில்லி அசிபேட் 75 சதவீத எஸ்.பி. 666 அல்லது 100 கிராம் தியோமெதோக்ஜம் 25 சதவீத டபிள்யூ.ஜி., அல்லது 80 சதவீத பைப்ரோனில் பயன்படுத்தி இலைச்சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை