உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சான்றிதழ் வழங்கல்

சான்றிதழ் வழங்கல்

மதுரை: இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.,), அசெஞ்சர் சார்பில் மதுரை பெட்கிராட் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.உலர் பழங்கள், காய்கறிகள், பழங்கள் பதப்படுத்துதல், குறுந்தானிய மதிப்பு கூட்டுதல், வீட்டு உபயோக ரசாயனப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி பெற்றவர்கள் பங்கேற்றனர். பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்றார். நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை வகித்தார். தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள் ரூபி முன்னிலை வகித்தனர். இ.டி.ஐ.ஐ., திட்ட அலுவலர் ரஞ்சித்குமார் அரசு திட்டங்களை விளக்கினார்.பாண்டியன் சரஸ்வதி யாதவ் குழும நிர்வாக இயக்குநர் வரதராஜன் சுயதொழில் முனைவோராவது குறித்தும், தமிழ்நாடு வர்த்தக சங்க தொழிற்சாலைகள் பிரிவு நிர்வாக இயக்குநர் ஜெயச்சந்திரன் தொழில் வளர்ச்சி குறித்து பேசினார். பயிற்சியாளர்கள் விஜயவள்ளி, ஹரிதா, ஐஸ்வர்யா, குமரேஸ்வரி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை