உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கருப்பாயூரணி குறுவட்ட கூடைப்பந்து போட்டி

கருப்பாயூரணி குறுவட்ட கூடைப்பந்து போட்டி

மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேலுார் கல்வி மாவட்டத்திற்கான கருப்பாயூரணி குறுவட்ட போட்டிகளை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி நடத்தியது. ஆடவர் 14 வயது பிரிவு கூடைபந்து இறுதிப்போட்டியில் இளங்கோ பள்ளி 40 - 15 புள்ளிகளில் பி.பி.எம். மெட்ரிக் பள்ளியை வீழ்த்தியது. 17 வயது பிரிவில் இளங்கோ பள்ளி 32 - 18 புள்ளிகளிலும் 19 வயது பிரிவில்39 - 38 புள்ளிகளில் கே.கே. நகர் மகாத்மா பள்ளியை வீழ்த்தியது. ஆடவர் கபடி 14 வயது போட்டியில் லயன்ஸ் மெட்ரிக் பள்ளியை 38 - 12 என்ற புள்ளிகளிலும் 19 வயது பிரிவில் இளமனுார் ஆதிதிராவிடர் பள்ளியை 49 - 12 என்ற புள்ளிகளிலும் வீழ்த்தியது.வைகை கூடைபந்து அகாடமி தலைவர் சுரேஷ், பயிற்சியாளர் அன்புக்குமார், தலைமையாசிரியை உமா மகேஸ்வரி, உடற்கல்வி இயக்குநர் ரகுபாண்டி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி