உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

மதுரை: தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி புனேயில் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பாய்ன்ட் பைட்டிங், லைட் கான்டாக்ட், கிக் லைட், மியூசிக்கல் பார்ம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் மதுரையை சேர்ந்த 7 மாணவ, மாணவியர் 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் வென்றனர்.பாயின்ட் பைட்டிங் பிரிவில் ராஜவர்ஷினி 28 கிலோ எடை பிரிவில் தங்கம், சாரா 30 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றனர். டீம் பாயின்ட் பைட்டிங் பிரிவில் சாரா தங்கம் வென்றார். கிக் லைட் பிரிவில் ஜெய் சிம்ம வர்மன் 57 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார்.மியூசிக்கல் பார்ம் பிரிவில் ஹர்ஜித், லக்சன் வெள்ளி வென்றனர். கிரியேட்டிவ் பார்ம் பிரிவில் நிகில் வெண்கலம் வென்றார். போட்டிகளில் வென்றவர்களை மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் நாராயணன், செயலாளர் பிரகாஷ் குமார், துணைத் தலைவர் கார்த்திக், பயிற்சியாளர் முத்துக்குமார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி