மதுரைக்கு குன்றத்து சுவாமி புறப்பாடு
திருப்பரங்குன்றம் : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் ஆவணி மூலத் திருவிழாவில் பங்கேற்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் செப். 12ல் புறப்படுகிறார்.அத்திருவிழாவில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி பாண்டியராஜாவாக பங்கேற்பார். அதற்காக அவர் தெய்வானையுடன் செப். 12 காலையில் கோயிலில் இருந்து புறப்பாடாகி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்று சேர்வார். அங்கு திருவிழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று செப். 18ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ஆகியோர் திருப்பரங்குன்றம் திரும்புவர்.இந்நாட்களில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கும்போல் கோயில் நடை திறக்கப்பட்டு, பூஜை நடைபெறும். தங்க ரதப்புறப்பாடு மட்டும் ரத்து செய்யப்படும்.