உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / l மதுரையில் பிடிபடும் மாடுகளுக்கு l மூக்கணாங்கயிறு உடன் மாநகராட்சி

l மதுரையில் பிடிபடும் மாடுகளுக்கு l மூக்கணாங்கயிறு உடன் மாநகராட்சி

மதுரையில் வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்வோருக்கும் பெரும் சவாலாக இருப்பது ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகளும், நாய்களும் தான். மாடுகள் மிரண்டு வாகன ஓட்டிகள் மீது மோதியும்,நாய்கள் விரட்டியும் தினமும் விபத்து நடக்கிறது. இதற்காக அதிகபட்ச நடவடிக்கையாக ஒரு மாடுக்கு அதன் உரிமையாளருக்கு ரூ.3 ஆயிரம்மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. தொகை குறைவாக உள்ளதால் உடனே செலுத்தி மீண்டும்பொறுப்பின்றி மாடுகளைரோடுகளில் திரிய விடுவது தொடர்ந்தது. இதனால் மாடுகளை கட்டுப்படுத்துவதில் மாநகராட்சி திணறியது. மாடுகள் பிரச்னை குறித்து நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், 'மாடுகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

'தில்' காட்டிய மாநகராட்சி

ஒரு வாரத்தில் சுற்றித்திரிந்த 15க்கும் மேற்பட்ட மாடுகளை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் பிடித்து செல்லுார் மாநகராட்சி வளாகத்தில் கட்டி வைத்திருந்தனர். வழக்கம்போல் அபராத்தை செலுத்தி மீட்டு விடலாம் என நினைத்த உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், மாடுகள் அனைத்தையும் தென்காசி கோ சாலைக்கு மாநகராட்சி கொண்டு சென்றுவிட்டது. இதற்கு எதிர்ப்புகள் வந்தாலும் மாடுகள், நாய்கள் விஷயத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என மாநகராட்சி 'தில்' காட்டியுள்ளது.

நாய்களுக்கு உரிமம் கட்டாயம்

அதிகாரி ஒருவர் கூறியதாவது: பலமுறை அபராதம் விதித்து அறிவுரை வழங்கினாலும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் ரோடுகளில் தான் விடுகின்றனர். இது பல ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கதான் பிடிபடும் மாடுகளை தென்காசி கோ சாலைக்கு அனுப்ப முடிவானது. இதற்காக ஒரு மாடுக்கு தலா ரூ.70 ஆயிரம் வரை மாநகராட்சிக்கு செலவாகிறது. இருப்பினும் இந்த நடவடிக்கை தொடரும். இதுபோல் வீட்டு வளர்ப்பு நாய்களுக்கு ஜூன் 4க்கு பின் கட்டாயம்உரிமம் பெற வேண்டும்என்ற நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். தெரு நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்படும் எண்ணிக்கையும் இரண்டு மடங்காக அதிகரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை