உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காவலர்களுக்கு சட்ட விளக்க பயிற்சி

காவலர்களுக்கு சட்ட விளக்க பயிற்சி

மதுரை, ' மதுரை மத்திய சிறை காவலர்களுக்கு மூன்று புதிய சட்டங்கள் குறித்த விளக்க பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது.இந்தியாவில் மூன்று புதிய சட்டங்கள் ஜூலை 1ல் அமலுக்கு வர உள்ள நிலையில் மதுரை மத்திய சிறை சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு இந்த சட்டங்கள் குறித்து மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.நேற்று நடந்த துவக்க விழாவில் மதுரை சிறைத்துறை தலைவர் பழனி முன்னிலை வகித்தார். மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிதுரை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்ட உதவி தலைமை வழக்கறிஞர் சிவக்குமார், சிவகங்கை மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் சாமி சந்திரசேகரன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.பாரதிய நீதிச் சட்டம், 2023, பாரதிய சாட்சியச் சட்டம், 2023,பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம், 2023 குறித்த பயிற்சியில் 300 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ