உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீச்சல் போட்டியில் வென்ற மதுரை வீரர்கள்

நீச்சல் போட்டியில் வென்ற மதுரை வீரர்கள்

மதுரை : கோவை பொள்ளாச்சியில் சி.ஐ.எஸ்.சி.இ., பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான நீச்சல் போட்டி நடந்தது. இதில் மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்றனர்.50 மீட்டர் ப்ரீஸ்டைல், பட்டர்பிளை பிரிவுகளில் சஞ்சீவன் தங்கப்பதக்கம், 100 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் தீபிகா தங்கம், 100 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் வெள்ளி, 50 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். 50, 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் சிவபாலன் தங்கம், 50 மீட்டர் பட்டர்பிளை போட்டியில் வெண்கலபதக்கம் வென்றார். 400 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் ரிஷிவர்ஷன் தங்கம், 200 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளி, 200 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் பிரணவ் வெண்கலம், 100 மீட்டர் பட்டர்பிளை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 50 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் தியானேஷ் தங்கம், 100 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளி, 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் வெண்கலபதக்கம் வென்றார்.400 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் அகஸ்தியன் தங்கம், 100 மீட்டர் ப்ரீஸ்டைல், 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 50, 100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக், 50 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் முகமது இக்பால் வெண்கல பதக்கம் வென்றார்.பதக்கம் வென்றவர்கள் பெங்களூருவில் செப்டம்பரில் நடக்க உள்ள தேசிய நீச்சல் போட்டியில் தமிழக அணி சார்பாக பங்கேற்க தகுதி பெற்றனர். பயிற்சியாளர்கள் சதீஷ் பாண்டியன், வெங்கடேஷ், நாகராஜ் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை