மாசி களரி திருவிழா
மேலுார்; சிலிப்பிபட்டியில் திருமலை மற்றும் கரடி கருப்பணசாமி மாசி களரி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பிப். 24ஆம் தேதி முதல் விரதமிருந்தனர். பிப். 25 பச்சை பயறுகளை பரப்புதல் நிகழ்ச்சியும், நேற்று பால் சாதம் சுவாமிக்கு படைத்து திரி எடுத்து களரி ஆட்டமும் நடந்தது. தொடர்ந்து சாமியாடியிடம் பக்தர்கள் அருள்வாக்கு பெற்றனர். பிப். 27 கிடாய் வெட்டும் நிகழ்ச்சி, பிப். 28 அம்மனுக்கு கரகம் எடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலிப்பிபட்டி, வல்லாளபட்டி பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 19 வருடங்களுக்கு பிறகு இத் திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.