| ADDED : மே 26, 2024 04:19 AM
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே சரந்தாங்கியில் பெரும்பிடுகு முத்தரையர் 1349வது சதய விழா கொண்டாடப்பட்டது.அவரது சிலைக்கு அமைச்சர் மூர்த்தி,எம்.எல்.ஏ., வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி, தி.மு.க., அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன்,பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி பங்கேற்றனர்.மேலுார் எம்.எல்.ஏ., பெரிய புள்ளான், பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.கிராமத்தினர் பால்குடம் எடுத்து பாலாபிஷேகம் செய்தனர்.