உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தாம்ப்ராஸ் கிளை புதிய நிர்வாகிகள்

தாம்ப்ராஸ் கிளை புதிய நிர்வாகிகள்

மதுரை : தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் ஜெய்ஹிந்த்புரம் கிளை தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. மாநில மூத்த துணைத் தலைவர் அமுதன், துணைப் பொதுச் செயலாளர் பக்தவத்சலம், கொள்கை பரப்புச் செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட தலைவர் ரங்கராஜன், பொருளாளர் நாராயணன் முன்னிலை வகித்து பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.புதிய தலைவராக கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளராக ராமகிருஷ்ணன், பொருளாளராக சுப்ரமணியன், துணைத் தலைவராக ஜெகநாதன், இணைச் செயலாளராக ரகுராமன், இளைஞரணி செயலாளராக மீனாட்சிசுந்தரம், மகளிர் அணி செயலாளராக ராஜம்மீனாட்சி, இளைஞரணி இணைச் செயலாளராக நாராயணன், முதன்மை ஆலோசகர் ஸ்ரீனிவாசன், ஆலோசகர்களாக வெங்கட்ராமன், கல்யாணி, மகளிர் அணி இணைச் செயலாளராக பத்மா, உமா, சித்ரா, செயற்குழு உறுப்பினர்களாக பாலசுப்ரமணியன், ரங்கநாதன், எஸ்.முத்துலட்சுமி, உத்திரா, எம்.முத்துலட்சுமி, சிவகாமி, ராமசாமி,ரகுபதி, ராஜலட்சுமி, ரகு தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி