உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /    புது குற்றவியல் சட்டம் வழக்கறிஞர்கள் கருத்தரங்கு

   புது குற்றவியல் சட்டம் வழக்கறிஞர்கள் கருத்தரங்கு

மதுரை: மக்களாட்சி உரிமைக்கான வழக்கறிஞர்கள் மேடை சார்பில், 'அரசமைப்பின் பார்வையில் புதிய குற்றவியல் சட்டங்கள்' தலைப்பில் மதுரையில் கருத்தரங்கு நடந்தது.தமிழக ஜாக் அமைப்பின் துணைத் தலைவர் ஆனந்த முனிராஜ் தலைமை வகித்தார். வழக்கறிஞர் ஜான்வின்சென்ட் வரவேற்றார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா பேசியதாவது: பார்லிமென்ட்டில் 146 எம்.பி.,க்களை வெளியேற்றிவிட்டு புதிய சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தது. இம்மூன்று சட்டங்களும் தேவையற்றது. செல்வ வளங்களை உருவாக்கும் ஏழைகளின் பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்க முடியவில்லை என்றார்.மூத்த வழக்கறிஞர் மோகன் பேசுகையில்,''இந்திய தண்டனைச் சட்டம், சாட்சிய சட்டம் முற்போக்கானது. புதிய சட்டத்திற்கு மாநில அரசுகளிடம் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. குழப்பம் ஏற்படுத்தும்'' என்றார். மூத்த வழக்கறிஞர் லஜபதிராய், மதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவர் (பொறுப்பு) பாஸ்கர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி