உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

மதுரை, : இளமனுார் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மகேந்திர பாபு எழுதிய இரண்டு நுால்கள் வெளியீட்டு விழா நடந்தது.தொழிலதிபர் கணேசன் தலைமையேற்க, வெற்றித்தமிழர் பேரவைத் தலைவர் சுரேஷ், தொழிலதிபர் முனியப்பன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார். ஐஷனா வரவேற்பு நடனம் ஆடினார். 'வெற்றிக் கதவின் திறவுகோல்' என்ற நுாலை சாகித்ய அகாடமி விருதாளர் சோ.தர்மன் வெளியிட, எழுத்தாளர் ஜி.வி.ரமேஷ்குமார் பெற்றார். 'பால்யம் என்றொரு பருவம்' நுாலை கவிஞர் மு.முருகேஷ் வெளியிட கவிஞர் மூரா பெற்றுக்கொண்டார்.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு 'ஆற்றல் ஆசிரியர்' விருதினை புலவர் சன்னாசி, தொடக்கக் கல்வி அலுவலர் கணேசன் வழங்கினர். ஆசிரியர்கள் சொர்ணலதா, தேவி, சாந்தி சின்னத்தம்பி, மலர்விழி, மு.க.இப்ராஹிம், ரகமத்துல்லா, சண்முகவேல், ஷேக்நபி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. நுாலாசிரியர் மகேந்திர பாபு நன்றி கூறினார்.ஆசிரியர் ரமேஷ் கண்ணன் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை கூத்துப்பட்டறை பொதுச்செயலாளர் லதா, லட்சுமி, முத்துராஜா, விஜய், வினோத் செய்திருந்தனர். முத்துசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ