உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கால்வாய் இல்லாத கட்டக்குளம் மனு அளித்தும் இழுத்தடிக்கும் அதிகாரிகள்

கால்வாய் இல்லாத கட்டக்குளம் மனு அளித்தும் இழுத்தடிக்கும் அதிகாரிகள்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே கட்டக்குளத்திற்கு பாசன கால்வாய் ஏற்படுத்தாமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருவதால் இப்பகுதி நிலங்கள் தரிசாக கிடக்கின்றன.பதினைந்து ஆண்டுகளுக்கு முன் மதுரை - திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலை அமைத்தபோது கட்டக்குளத்திற்கான பெரியாறு பாசன கிளைக் கால்வாய் கையகப்படுத்தப்பட்டது. அந்த கால்வாயை சாலையோரம் அமைக்க வேண்டும் என 10 ஆண்டுக்கும் முன்பு லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இன்று வரை நடவடிக்கை இல்லை. குறைதீர் கூட்டங்களில் மனு அளித்தும் அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.விவசாயி தங்கராஜ்: கட்டக்குளம் பிரிவில் கால்வாய்க்கு பாலம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் முயற்சியில் கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டு வந்தோம். பாலம் துார்ந்து மேடானதால் பயனில்லை. நீர்வளம், நெடுஞ்சாலை துறைகள், கலெக்டரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எங்களுக்கு கால்வாய் கிடைக்கவில்லை. கிணறு வசதியுள்ள விவசாயிகள் குறைந்த அளவில் விவசாயம் செய்கின்றனர். தற்போது 200 ஏக்கர் வரை தரிசாகியுள்ளது. எனவே நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை