உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு

சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு

திருமங்கலம் : திருமங்கலம் நீதிமன்றம் அருகே பத்திரப்பதிவு அலுவலகம் பழமையான கட்டடத்தில் இயங்கியது. ரூ. 1.5 கோடி மதிப்பில் புதிய அலுவலகம் கட்டும் பணி 2 ஆண்டுகளாக நடந்ததால் வாடகை கட்டடத்தில் அலுவலகம் இயங்கியது. புதிய அலுவலக பணிகள் முடிந்தும் நீண்ட நாட்கள் திறப்பு விழா நடத்தாதது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இங்கு நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ரம்யா குத்து விளக்கேற்றினார். மாவட்ட பதிவாளர்கள் சுடரொளி, சீனிவாசன், திருமங்கலம் சார்பதிவாளர் (பொறுப்பு) நல்லக்குமார், நகராட்சி துணைத் தலைவர் ஆதவன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ