மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
6 hour(s) ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
6 hour(s) ago
போலீஸ் செய்திகள்...
7 hour(s) ago
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
7 hour(s) ago
வாடிப்பட்டி: பரவை பேரூராட்சி ஊர்மெச்சிகுளத்தில் மாநகராட்சி குடிநீர் பைப் லைன் மீது பஸ் ஸ்டாப் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மதுரை மெயின் ரோட்டில் ஊர்மெச்சிகுளம் பிரிவில் கடந்த பிப்ரவரியில் ரூ.20 லட்சத்தில் பஸ்ஸ்டாப் கட்ட பூமி பூஜை நடந்தது. இதற்காக 30 வயது நிழல் தரும் மரத்தின் கிளைகளை வெட்டினர். கட்டுமானத்திற்கு பில்லர் அமைக்க தோண்டிய குழிகளில் 4ல் பரவை பேரூராட்சி குடிநீர் குழாயும், 4ல் மாநகராட்சி குடிநீர் மெகா சைஸ் பைப் லைனும் செல்கிறது.இதில் பேரூராட்சி குழாயை மாற்றி அமைத்துள்ளனர். மாநகராட்சி பைப் லைனில் பழுது ஏற்பட்டால் பஸ் ஸ்டாப்பை இடித்து பழுது நீக்கும் நிலை ஏற்படும். இதன் அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. எனவே பஸ் ஸ்டாப் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.பாலமுருகன் என்பவர் கூறுகையில், ''இந்த இடத்தில் ரூ.4.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட சில்வர் பஸ் ஸ்டாப், சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது. அது என்ன ஆனது எனத் தெரியவில்லை. மரத்தை வெட்டாமல் சிறிய அளவில் பஸ் ஸ்டாப் போதுமானது. அல்லது வேறு இடத்தில் பஸ் ஸ்டாப் கட்ட வேண்டும் என மனு அளித்துள்ளேன் என்றார்.
6 hour(s) ago
6 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago