உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாசி வீதிகளில் பார்க்கிங் மா.கம்யூ., வலியுறுத்தல்

மாசி வீதிகளில் பார்க்கிங் மா.கம்யூ., வலியுறுத்தல்

மதுரை : 'மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி நான்கு மாசி வீதிகளில் வியாபாரிகள், மக்கள் பாதிக்காத வகையில் வாகன நிறுத்தம், போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும்' என மார்க்சிஸ்ட் கம்யூ., வலியுறுத்தியுள்ளது.நகர் செயலாளர் கணேசன் கூறியதாவது: நகரின் முக்கிய பகுதியான மாசி வீதிகளில் தனியாருடன் இணைந்து வாகன நிறுத்தம், போக்குவரத்தை முறைப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தனியாருடன் இணைந்து செய்வதை ஏற்க முடியாது. அது, பார்க்கிங் கட்டண வசூலிப்பு நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும். மாநகராட்சி வியாபாரிகள், மக்களிடம் மாநகராட்சி கருத்து கேட்பதற்கு முன் அப்பகுதியில் போக்குவரத்தை முறைப்படுத்த மாநகராட்சியிடம் என்ன திட்டம் உள்ளது என்பதை மக்கள் பிரதிநிதிகள், வியாபாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி