உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பதஞ்சலி சில்க்ஸ் விரிவுபடுத்தப்பட்ட ஷோரூம் திறப்பு விழா

பதஞ்சலி சில்க்ஸ் விரிவுபடுத்தப்பட்ட ஷோரூம் திறப்பு விழா

மதுரை: மதுரை தெற்குமாசி வீதி பதஞ்சலி சில்க்ஸின் விரிவுபடுத்தப்பட்ட பட்டு ஷோரூம், 'பிரியசாகரம்' எனும் பிரிவு துவக்க விழா நேற்று நடந்தது. உரிமையாளர் ராஜம்மாள் சுப்பிரமணியன் பட்டுப்பிரிவு, மகாத்மா பள்ளிகள்நிறுவனர் பிரேமலதா பன்னீர்செல்வம் பிரியசாகரம் பிரிவை துவக்கி வைத்தனர்.பட்டுப்பிரிவை விரிவுபடுத்தி புதிய பாரம்பரிய பட்டு ரகங்களை இங்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியின் தனிச்சிறப்பான பேஷன் புடவைகள், சுரிதார்களுக்கென்று 'பிரியசாகரம்' எனும் தனிப்பிரிவை துவக்கியுள்ளனர்.நிர்வாக இயக்குனர் சரவணன் கூறியதாவது:தறி தொழில் செய்வதால் தொடர்ந்து புதிதாக, மற்ற இடங்களில் கிடைக்காத டிசைன்களை அறிமுகம் செய்துவருகிறோம். புதிய டிசைன்கள் எப்போதும் இருக்கும் வகையில் பட்டுப்பிரிவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாங்கள் தறிக்காரர்கள் என்பதால் எங்களிடம் விலை குறைவு. ஆடைகளின் தரம், வடிவமைப்பு முறைகள் பற்றி வாடிக்கையாளர்களுக்கு நாங்களே விளக்குகிறோம். ஆன்லைன் விற்பனையும் உண்டு. தரம் குறையாமல் ரூ.1000 முதல் ரூ.1.25 லட்சம் வரை பட்டு ஜவுளி ரகங்கள் உள்ளன. இன்று (செப்.6) மட்டும் 10 சதவீதம் தள்ளுபடி தருகிறோம் என்றார். நிர்வாகிகள் முத்துவேல், செல்வம், ஜவுளி சங்கத் தலைவர் தயூப் அஸ்ரப், ஆடிட்டர்கள் பிரேம்நாத், அமர்நாத், அரசு வழக்கறிஞர் லிங்கதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ