உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வரிச்சியூர் மக்களின் பரிதாபம்

வரிச்சியூர் மக்களின் பரிதாபம்

மதுரை: வரிச்சியூர் கிராமத்தில் அடிப்படை சுகாதார வசதிகள் இன்றி மக்கள் பரிதாப சூழலில் வாழும் நிலைமையில் உள்ளனர்.கருப்பக்கால், வெள்ளாங்குளம், ராஜாக்கூர் வயல் பகுதிகளில் குப்பையை கொட்டுவதால் சுகாதார மாசு ஏற்பட்டு மக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பல முறை கிராம சபை கூட்டத்தில் முறையிட்டும் தீர்வு கிடைக்காத நிலையுள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கால்நடை வளர்க்கும் மலைசாமி கூறியதாவது: முன்பு இருந்ததைவிட இப்போது இக்கிராம சுகாதாரம் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. தெருக்களில் குப்பை முறையாக அகற்றப்படாததால் மாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு பலியாகியுள்ளன.உடைந்த கண்ணாடி பாட்டில்கள் கால்களில் குத்தி காயம் ஏற்படுத்தியுள்ளது.அழுகிய கழிவுகளால் துர்நாற்றம் வீசிவீடுகளில் வசிக்க முடியவில்லை. சில சமயம் குப்பையில் தீவைத்து எரிப்பதால் கிளம்பும் புகையால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. எப்போது எங்களுக்கு விடிவு பிறக்குமோ தெரியவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ