| ADDED : ஆக 10, 2024 05:22 AM
மதுரை : மேலுார் அருகே சுமதிபுரம் மெய்யர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:செம்மினிபட்டி அருகே சுமதிபுரத்தில் கோயில் ஆடி திருவிழாவையொட்டி ஆக.,16ல் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி, பாதுகாப்பு வழங்கக்கோரி கலெக்டர், எஸ்.பி., கீழவளவு போலீசாருக்கு மனு அனுப்பினோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: ஜல்லிக்கட்டு தொடர்பான நிகழ்ச்சிகள்ஜனவரி - மே வரை மட்டுமே அனுமதிக்கப்படும். இக்கிராமம் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான அரசிதழில் இடம்பெறவில்லை. இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள்: மனுவை அரசு தரப்பு நிராகரித்தது ஏற்புடையதே. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.