உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குற்றங்களை தடுக்க 100 வார்டுகளிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் துவங்க திட்டம்

குற்றங்களை தடுக்க 100 வார்டுகளிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் துவங்க திட்டம்

மதுரை : மதுரையில் குற்றங்களை தடுக்க மாநகராட்சியின் 100 வார்டுகளை ஒருங்கிணைக்கும் வகையில் வாட்ஸ் ஆப் குழுக்கள் துவங்கும் முயற்சியாக அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் முதல் குழு துவங்கப்பட்டுள்ளது என போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார்.போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் லோகநாதன் தலைமையில் மெகா குறைதீர்க்கும் முகாம் நடந்தது. 236 மனுக்கள் பெறப்பட்டன. பல்வேறு மனுக்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அண்ணாநகர் பகுதிக்கான வாட்ஸ் ஆப் குழுவை துவக்கி வைத்தார். இதன் பின் அவர் கூறியதாவது:இதுவரை நடந்த முகாம்கள் மூலம் 1000க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதியில் 100 வார்டுகளிலும் மக்கள் - போலீஸ் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் உருவாக்கப்படும். சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் அட்மினாக இருப்பர்.இதில் போலீஸ், வருவாய், ஆரம்ப சுகாதார, சத்துணவு ,போக்குவரத்து, மாநகராட்சி பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் இணையலாம். அவரவர் பகுதி குற்றச் சம்பவங்கள் உள்ளிட்டவற்றை ஆதாரங்களுடன் பதிவிடலாம். முக்கிய பிரச்னைகளை அட்மின்களுக்கு அனுப்பலாம். ரகசியம் காக்கப்படும். வாழ்த்து, அரசியல், ஜாதி, மதம் தொடர்பான பதிவுகள் பகிர கூடாது என்றார்.துணை கமிஷனர்கள் மதுகுமாரி, ராஜேஸ்வரி, வனிதா, கூடுதல் எஸ்.பி., காட்வின் ஜெகதீஸ்குமார், நுண்ணறிவு உதவி கமிஷனர் சந்திரசேகர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

VASANTHA RANI
செப் 05, 2024 10:30

முதலில் விளாங்குடி சொக்கநாதபுரம் பாரதியார் நகர் நேரு நகர் பகுதிகளை சேர்க்கவும்


Shanmugavel Velsurya
செப் 05, 2024 10:06

குழுவில் இணைவது எப்படி ?