மரக்கன்றுகள் நடவு
மதுரை: மதுரை எல்.கே.பி., நகர் சக்கிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையிலும், கருங்காலக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் முருகன் தலைமையிலும் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்பாடுகளை பார்வை பவுண்டேஷனில் இளம் மக்கள் இயக்கம் சார்பாக சோழன் குபேந்திரன் செய்திருந்தார். இவரது முயற்சியால் 90 ஆயிரம் மரக்கன்றுகள் இதுவரை நடப்பட்டுள்ளன. மரக்கன்றுகளை பராமரிக்க மாணவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கும் திட்டத்தில் நடப்பட்டது.