எஸ்.எஸ்.காலனி மின் கணக்கீடு முறை மாற்றம்
மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி மின் நுகர்வோர்களின் மின் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுப்பிரமணியபிள்ளை தெரு, ராமன்செட்டி தெரு, கண்ணதாசன் தெருக்கள், எஸ்.பி.ஓ.ஏ., காலனி, அபர்ணா டவர், ராசி டவர் பகுதிகளில் உள்ள 923 மின் இணைப்புகளில் மின் கணக்கீடு ஒற்றைப்படை மாத முறையில் இதுவரை கணக்கெடுக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக, இரட்டைப் படை மாத முறைக்கு மாற்றப்பட உள்ளது. அதனால் இப்பகுதி மின்நுகர்வோர் ஆகஸ்ட் கணக்கீட்டு தொகையை உரிய காலத்தில் செலுத்த வேண்டும் என அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.