உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குறவகுடியில் மக்கள் தொடர்பு முகாம்

குறவகுடியில் மக்கள் தொடர்பு முகாம்

உசிலம்பட்டி:' உசிலம்பட்டி தாலுகா குறவகுடியில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது.கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, டி.ஆர்.ஓ., சக்திவேல், பயிற்சி கலெக்டர் வைஷ்ணவி பால், அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், தாசில்தார் பாலகிருஷ்ணன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.231 பயனாளிகளுக்கு ரூ.2.16 கோடிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.இதில் கலெக்டர் சங்கீதா பேசியதாவது:உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு நம்நாடு. ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். பொது மக்கள் அடிப்படை ஆவணங்களான ஆதார், குடும்ப, வாக்காளர் அடையாள அட்டைகளை தவறாமல் பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் வங்கிக் கணக்கு மூலம் பயனாளிக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் கூட்டுறவு வங்கியிலாவது கணக்கு துவக்க வேண்டும், என்றார்.* சமீபத்தில் கட்டிய கழிவுநீர் கால்வாய் குறவக்குடி காலனி பகுதியில் முடிவடைவதால் கழிவுநீர் காலனிக்குள் வருகிறது. இங்குள்ள தெருக்களிலும் சாக்கடை, ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். உடனே அந்தப்பகுதிக்கு நடந்து சென்ற கலெக்டர் சங்கீதா, இடத்தை ஆய்வு செய்து, ஒன்றிய அதிகாரிகளிடம் கழிவுநீர் கால்வாய், ரோடு வசதி ஏற்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை