உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரயில்வே டி.ஜி.பி., ஆய்வு

ரயில்வே டி.ஜி.பி., ஆய்வு

மதுரை: வேலுார் காட்பாடியில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து ரயில்களின் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உத்தரவிடப்பட்டது. மதுரை ஸ்டேஷனில் டி.எஸ்.பி., காமாட்சி தலைமையிலான போலீசார், பெண் பயணிகள் தனியாக வந்தால் அவர்களை ஆட்கள் அதிகம் பயணிக்கும் பெட்டியில் பயணிக்க ஏற்பாடு செய்கின்றனர். பெண் பயணிகளை பின்தொடர்ந்து யாரும் வருகிறார்களா என கண்காணிக்கின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மதுரை ஸ்டேஷனில் ரயில்வே டி.ஜி.பி., வன்னியப்பெருமாள் ஆய்வு செய்தார். பயணிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதைதொடர்ந்து தென்காசி புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ