உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில கராத்தே போட்டியில் சாதனை

மாநில கராத்தே போட்டியில் சாதனை

பாலமேடு : மதுரையில் ஆலன் திலக் சிட்டோரியோ பயிற்சி பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே, யோகா போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்ற பாலமேடு பத்ரகாளியம்மன் பள்ளி மாணவ மாணவிகள் கராத்தே போட்டியில் சாருகேஷ், சிவதீக்சித், திவாகர் மனிஷ் முதலிடமும், மகிழினி, சுவானிகா, கவி அரசு 2ம் இடமும், யோகா போட்டியில் சகானா, பிரகதீஸ்வரி, சவ்பர்னிகா, கனிஷ் முதலிடமும், சபீனா 2ம் இடம் பிடித்தனர். வெற்றிபெற்ற மாணவர்கள், பயிற்சியாளர் பாலகுருவை நாடார் உறவின்முறை சங்க பள்ளி தலைவர் அருணாசல வேல்பாண்டியன், துணைத் தலைவர் சிவாஜி, செயலாளர் மயில்வாகனம் மற்றும் நிர்வாகிகள், பள்ளி முதல்வர் ரவி பிரியா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ