ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம்
மதுரை: மதுரையில் இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பாண்டி தலைமையில், நிதி காப்பாளர் சீனிவாசன் முன்னிலையில் நடந்தது. இதில், மதுரை கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் ஆசிரியர், ஓய்வூதியர்களிடம் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட அலுவலர்கள் வசூல் செய்வது குறித்து இணை இயக்குநரிடம் கூட்டமைப்பு நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் வசூலிப்பது தொடர்கிறது. இதை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்துவது, ஆசிரியர்களின் பணிவரன் முறை, தகுதிகாண் பருவம், தேர்வுநிலை சிறப்பு நிலை உரிய நேரத்தில் அளிப்பது, இணை இயக்குநர் அலுவலகத்தில் 5 ஆண்டுகளாக காலியாக உள்ள டி.இ.ஓ., பணியிடத்தை நிரப்ப வேண்டும், மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது; விதிப்படி தலா 9 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.