உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு சம்பளத்தை மாற்றியமைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு சம்பளத்தை மாற்றியமைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு சம்பளத்தை மாற்றியமைத்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை கிருஷ்ணன் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு மாதிரி (மாடல்) பள்ளியில் ஊழியராக பணிபுரிகிறேன். ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் தொடர்பாக 2010ல் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அரசாணை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அதை ரத்து செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் நிர்ணயித்து வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.2022ல் தனிநீதிபதி: பணியை வரன்முறைப்படுத்தாமல் தனக்கு எந்த வேலையும் தேவையில்லை என்கிறார் மனுதாரர். தொகுப்பூதிய அரசாணை மனுதாரருக்கு பொருந்தாது. வழக்கு முடிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார். இதை எதிர்த்து கிருஷ்ணன் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: தொகுப்பூதிய அரசாணைப்படி மனுதாரருக்கு மாதம் ரூ.6000 சம்பளம் வழங்கப்படுகிறது. இதுபோல் ஆசிரியரல்லாத உதவியாளர்கள், தோட்டப் பணியாளர்கள், இதர ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போதுமானதல்ல. இது குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் வராது. இக்குறைந்த சம்பளத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்துவது சிரமம். சம்பளத்தை உயர்த்துவதுதான் தீர்வாக அமையும்.ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. அதுபோல் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு சம்பளத்தை மாற்றியமைத்து தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வி இயக்குனர் 4 வாரங்களில் அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்