உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.62.50 லட்சம் புதிய கட்டடங்கள் திறப்பு

ரூ.62.50 லட்சம் புதிய கட்டடங்கள் திறப்பு

மதுரை : மதுரை மாநகராட்சியில் மண்டலம் 3ல் ரூ.62.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை அமைச்சர் தியாகராஜன் திறந்து வைத்தார்.இம்மண்டலத்தில் மத்திய தொகுதி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே தெற்கு, கீழச்சித்திரை வீதிகளில் கட்டப்பட்ட இலவச கழிப்பறைகள், திடீர்நகர் புதிய ரேஷன் கடை, மேலவாசல் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் உள்ளிட்ட கட்டடங்களை அமைச்சர் திறந்து வைத்தார். மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் குருமூர்த்தி, உதவி கமிஷனர் ரங்கராஜன், செயற்பொறியாளர் சுந்தர ராஜ்,பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ், கவுன்சிலர்கள் கார்த்திக், பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ