மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
02-Feb-2025
மதுரை: லேடி டோக் கல்லுாரி விளையாட்டு விழா உடற்கல்வித்துறை சார்பில் நடந்தது. முதல்வர்பியூலா ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் பளுதுாக்கும் வீரர் சந்திரசேகரன் பங்கேற்றார். அவர் பேசுகையில், ''உடற்கல்வி துறையில் வாய்ப்புகள் நிறைய உள்ளன. இத்துறையில் கிடைத்த அனுபவங்கள் எனக்கு நிறைய வாய்ப்பை பெற்று தந்துள்ளது'' என்றார். சிவகங்கை உடற்கல்வி இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் பேசுகையில், ''பெண்கள் தைரியத்துடன் எல்லா சூழலையும்எதிர்கொள்ள வேண்டும்'' என்றார். சிலம்பம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தனிநபர் பிரிவில் அனைத்து போட்டிகளிலும் வென்ற வரலாற்றுத் துறை மாணவி ஐஸ்வர்யா முதலிடம் பெற்றார். துறைகளுக்கு இடையிலான போட்டியில் வணிகவியல் துறை சாம்பியன் பட்டம் பெற்றது. உடற்கல்வித்துறை இயக்குனர்கள் சாந்த மீனா, ஹேமலதா ஒருங்கிணைத்தனர். -முப்பெரும் விழா
பேரையூர்: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, விளையாட்டு போட்டி, ஆண்டு விழா நடந்தது. விளையாட்டுப் போட்டிகளில் வென்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னாள் ஆசிரியர் ஜீவன் டேவிட், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் வெள்ளைப்பாண்டி வரவேற்றார். உடற் கல்வி ஆசிரியர் செந்தில் ஏற்பாடுகளை செய்தார். தமிழ் இலக்கிய மன்றவிழா
மதுரை: செம்பியனேந்தல் அரசு ஆதிதிராவிடர் நலநடுநிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா நடந்தது. ஆசிரியர் பஞ்சபாண்டி வரவேற்றார். தலைமை ஆசிரியை மலர் விழி தலைமை வகித்தார். இளங்கோ முத்தமிழ் மன்ற ஆலோசகர் தங்கராஜ்,ஆசிரியர் சங்கரலிங்கம், வட்டார வளமைய ஆசிரியை நாகலட்சுமி பேசினர். சண்முகஞான சம்பந்தன் சிலப்பதிகார சிறப்பு குறித்து பேசினார். தமிழாசிரியை செல்வகுமாரி நன்றி கூறினார். விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை: யாதவர் கல்லுாரியில் மகளிர் நல மேம்பாட்டுக்குழு, மகளிர், மாணவர் நலக்குழு சார்பில் வீரபாண்டி கிராமத்தில் 'விரிவாக்கப்பணி - பெண் குழந்தைகள் விழிப்புணர்வு' குறித்த வீதி நாடகம் நடந்தது. முதல்வர் ராஜூ தலைமை வகித்தார். முன்னாள் செயலாளர் கண்ணன் பேசுகையில், ''பெண் குழந்தைகள் கருணை, மகிழ்ச்சி, அன்பு ஆகியவற்றின் அம்சமாக உள்ளனர். பெண் குழந்தைகளை பாதுகாத்தல், சமூக நீதி அதிகாரம்பெற்று தருவது வீட்டில் உள்ள அனைவரது கடமை'' என்றார். தலைவர் ஜெயராமன், செயலாளர் கண்ணன், சுயநிதிப்பிரிவு இயக்குனர் ராஜகோபால், வீரபாண்டி அரசினர் பள்ளி தலைமையாசிரியர் செல்வக்குமரேசன், பேராசிரியை அற்புதராணி பங்கேற்றனர். உறுதிமொழி ஏற்பு
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை காம் கேப்ஸ் சங்கம் சார்பில் 'இணைய பாதுகாப்பு நாள்' உறுதிமொழி ஏற்பு நடந்தது. கல்லுாரித் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன்,முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். இளங்கலை, முதுகலை மாணவர்கள், பேராசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர். துறைத் தலைவர் நாகசுவாதி, உதவி பேராசிரியர்கள் ஐஸ்வர்யலட்சுமி, பிரபா ஒருங்கிணைந்தனர். தேசிய கருத்தரங்கு
மதுரை: மதுரை கல்லுாரி ஆங்கிலத்துறை சார்பில்இந்திய அறிவுசார் அமைப்புகளில் இந்திய இலக்கியங்களின் பங்கு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு கல்லுாரித் தலைவர் சங்கர சீத்தாராமன் தலைமையில் நடந்தது. செயலாளர் நடனகோபால் துவக்கி வைத்தார். ஓய்வு பேராசிரியர் அனந்தராமன்,தஞ்சை தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருமலை பேசினர். மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். துறைத் தலைவர் ஷீலா, பேராசிரியர் வெங்கடேசன், மாணவர்கள் பங்கேற்றனர். இளங்கலை சங்க கூட்டம்
மதுரை: மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரிவணிக நிர்வாகவியல் துறை, யுவா மதுரை அத்தியாயம் சார்பில் இளங்கலை மாணவியர்சங்க கூட்டத்தை முதல்வர் வானதி துவக்கி வைத்தார். தங்கமயில் ஜூவல்லரி பொது மேலாளர் ஷைலஜா 'உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்' என்ற தலைப்பில் பேசினார். அத்தியாய தலைவர் ஷெனர் லால் பங்கேற்றார். துறைத் தலைவர் மரிய பொன் ரேகா வரவேற்றார். இணை பேராசிரியர் செல்வவீரகுமார், யுவா ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணைப் பேராசிரியர் ராம்குமார் நன்றி கூறினார்.
02-Feb-2025