கல்வி உதவித்தொகைதிருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்தின் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மணிமாறன் ஆலோசனைபடி நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அருந்தவம் முன்னிலை வகித்தார். அதிக மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களை பிடித்த 10 மாணவியருக்கு உயர் கல்வி படிப்பதற்காக ரூ. 25 ஆயிரம், பள்ளியில் விளையாட்டு துறையை மேம்படுத்தும் வகையில் உபகரணங்கள் வாங்க ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது. மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவியர் கலந்து கொண்டனர்.ஆசிரியர்களுக்கு மேயர் பாராட்டுமதுரை: மாநகராட்சி பள்ளிகளில் பொதுத் தேர்வுகளில் சென்டம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அவர்களை மேயர் இந்திராணி பொன்வசந்த் வாழ்த்தினார்.இதில் தலைமையாசிரியர்கள் மீனாட்சி (நாவலர் சோமசுந்தர பாரதியார்),முருகன் (கம்பர்), பாலசுப்பிரமணியன் (பாரதிதாசனார்), சவுந்திரபாண்டியன் (முனிச்சாலை உயர்நிலை), அன்பு (என்.எம்.எஸ்.எம்., உயர்நிலை), சிவக்குமார் (திருவள்ளுவர்), கண்ணகி (பாரதியார் உயர்நிலை) ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி, கண்காணிப்பாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சுற்றுச்சூழல் தின விழாசிலைமான்: எல்.கே.பி. நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.பசுமை சாம்பியன் அசோக்குமார் ஆக்சிஜனின் முக்கியத்துவம், மரங்கள் நடுதல், மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, மஞ்சப்பை உபயோகம் குறித்து விளக்கினார். பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். சுற்றுச்சூழல் குறித்து நடந்த வினாடிவினா போட்டியில் வென்ற செபாஸ்டியன், பாண்டி லட்சுமி, ஆஜிதா, உதய சந்திரிகா, பைரோஸ் பானு, சகாபுதீன் உள்ளிட்டோருக்கு விதை உண்டியல், மஞ்சப்பை பரிசளிக்கப்பட்டது. ஆசிரியர் சுகுமாறன் நன்றி கூறினார்.