உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி கல்லுாரி செய்தி

பள்ளி கல்லுாரி செய்தி

பட்டயக்கணக்காளர் தினவிழா

மதுரை: யாதவர் கல்லுாரியில் வணிகவியல் உயராய்வு மையம் சார்பில் பட்டயக்கணக்காளர் தினவிழா முதல்வர் ராஜூ தலைமையில் நடந்தது. செயலாளர் கண்ணன் வரவேற்றார். முன்னாள் செயலாளர் நவநீதகிருஷ்ணன் பேசினார். ஆடிட்டர் பாலசுப்பிரமணியன் சி.ஏ., சி.எம்.ஏ., ஏ.சி.சி.ஏ., படிப்புகள் குறித்து பேசினார். மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். பேராசிரியர் பாலசுப்பிரமணியம் ஏற்பாடு செய்தார்.

மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை: புதுார் அல்மீன் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமையாசிரியர் ேஷக்நபி தலைமையில் நடந்தது. உதவி தலைமையாசிரியர் ரஹமத்துல்லா வரவேற்றார்.மின் ஆய்வாளர் முத்துக்குமார் 'மின் பாதுகாப்பு நம் உயிர் பாதுகாப்பு' என்ற தலைப்பில் மின் கசிவிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது குறித்து பேசினார். உதவி மின் ஆய்வாளர் கனகவித்யா தேவி, இளநிலை மின் ஆய்வாளர் மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர்கள், அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர்.

தரநிர்ணயம் விழிப்புணர்வு

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி இந்திய தர நிர்ணய மாணவர் மன்றம் சார்பில் தரநிலைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் நடந்தன. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தார். மாணவி பவித்ரா வரவேற்றார். செயலர் விஜயராகவன் துவக்கி வைத்தார். இந்திய தர நிர்ணய அமைப்பின் வளர்ச்சி அலுவலர் சிவகுமார் பேசினார். தரச்சான்று பெற்ற பொருட்களின் நம்பகத் தன்மையை சரிபார்க்க உதவும் பி.ஐ.எஸ். 'கேர் ஆப்' மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தர நிலைகள் குறித்த கட்டுரைப் போட்டிகளில், நாகசிவ ஸ்ரீமீனா, சஞ்சய்குமார், மந்திரமூர்த்தி, வெற்றிவேல்முருகன் முதல் பரிசும், நிவேதா, சக்தி பாலன், முனீஸ்வரி 2ம் பரிசும், பவித்ரா, பரணிதரன், மார்ட்டினா கிறிஸ்டி 3ம் பரிசும் பெற்றனர். உணவியல் துறைத் தலைவர் கோபிமணிவண்ணன் ஒருங்கிணைத்தார். மாணவி ஸ்ரீஹரிணி நன்றி தெரிவித்தார்.

மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா கல்லுாரியில் முதலாம்ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கான 5 நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. செயலாளர் குமரேஷ்தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஸ்ரீனிவாசன் தொடக்க உரையாற்றினார். அனைத்து துறைத் தலைவர்களும் வரவேற்றனர். டீன் கவிதா, உள்தர மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டாளர் ராம்பிரசாத் கலந்து கொண்டனர். பேராசிரியர்கள் ராஜசேகரன், கலைவாணி, ஞானகுரு ஒருங்கிணைத்தனர்.

புத்தாக்க பயிற்சி

மதுரை: அரசு சட்டக் கல்லுாரியில் 5 ஆண்டு படிப்பின்முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது. முதல்வர் (பொறுப்பு) குமரன் வரவேற்றார்.உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசியதாவது: சட்டக் கல்வி சமூக மாற்றத்தை உருவாக்கும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கு வகித்தவர்கள் வழக்கறிஞர்கள்.அரசு சட்டக் கல்லுாரி அருகில் உயர்நீதிமன்றம் அமைந்துள்ளது மதுரையில் மட்டும்தான் என்றார். அரசு வழக்கறிஞர் கண்ணன் உட்பட பலர் பேசினர். உதவி பேராசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.

பசுமை பாதுகாப்போம்

மதுரை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் பசுமை காப்போம் என்ற பெயரில் மாணவர்களே மரக்கன்றுகளை கொண்டுவந்து வளாகத்தில் நட்டனர். வளாகத்தை பசுமையாக்குவோம் என உறுதியேற்றனர். முதல்வர் ராமமூர்த்தி, துணை முதல்வர் செல்வமலர், பி.ஆர்.ஓ., பிரெட்ரிக், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் கண்ணன், துறைத் தலைவர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கு வரவேற்பு

மதுரை: செந்தமிழ்க் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் சாந்திதேவி வரவேற்றார். நான்காம் தமிழ்ச்சங்கச் செயலாளர் மாரியப்பமுரளி முன்னிலை வகித்தார். காமராஜ் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் பேசினார். உதவிப் பேராசிரியர் கோகிலா நன்றி கூறினார். * மதுரை: நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை சிண்டிகேட்உறுப்பினர் சுப்பிரமணிய பிள்ளை, கல்லுாரி செயலாளர் ஜெகதீசன், முதல்வர் வசந்தகுமார், டீன் பாக்கியலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கல்வி உபகரணம் வழங்கும் விழா

மதுரை: ஆண்டார்கொட்டாரம் எல்.கே.பி., நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும்விழா தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது. ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். ஞானம் டிரேடிங் கம்பெனி சார்பில் ஞானசிகாமணி பள்ளிக்கு தேவையான பீரோ உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினார். மாற்றம் தேடி நல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன், சமூக ஆர்வலர்கள் பாலமுருகன், அசோக்குமார், கார்த்திக் உள்ளிட்டோர் பேசினர். ஆசிரியர்கள் அம்பிகா, சுகுமாறன், மனோன்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி