ஷாக் அடிக்கும் மின்கம்பங்கள்
கொட்டாம்பட்டி: கேசம்பட்டி ஊராட்சி கடுமிட்டான்பட்டிக்கு, ஒத்தக்கடையில் இருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது. இதில் குடிஊருணி பகுதியில் இருந்து ஒத்தக்கடை வரை ஊன்றப்பட்டுள்ள மின்கம்பங்களின் வழியாக 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களுக்கு மின் சப்ளையாகிறது. இந்த மின்கம்பங்களின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிகின்றன. மழைகாலங்களில் மின் கம்பங்களை மனிதர்கள் மற்றும் கால்நடைகள் கடந்து செல்லும் போது 'ஷாக்' அடிக்கிறது. மின்கம்பங்கள் உடைந்து விழுந்து உயிர்பலி ஏற்படும் முன் மின்கம்பங்களை மாற்ற வேண்டும். மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜ் குமார் கூறுகையில், விரைவில் மின்கம்பங்கள் மாற்றப்படும் என்றார்.