நகராட்சி அலுவலகம் முற்றுகை
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி சிவன்காளைத்தேவர் தெருவில் சாக்கடை கழிவு நீர் செல்ல முறையான வடிகால் வசதி இல்லாமல், தனியார் பட்டா நிலம் வழியாக சென்று தேங்கியுள்ளது. அவர் தனது பட்டா நிலத்தை அளந்து கழிவு நீர் செல்லும் வழியை அடைத்ததால், கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது.இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நகராட்சியில் மக்கள்முறையிட்டனர். நடவடிக்கை இல்லாததால் அந்தப்பகுதி பொதுமக்கள் நேற்று நகராட்சி கூட்டம்துவங்கும் முன்பாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கூட்டம் முடிந்தபின் நகராட்சித் தலைவர் சகுந்தலா, கமிஷனர் சக்திவேல், சுகாதார அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு தினங்களுக்குள் சாக்கடை வசதியை செயல்படுத்துவோம் என சமரசம் செய்தனர்.