மேலும் செய்திகள்
மா.கம்யூ., பயிற்சி முகாம்
26-Jul-2026
உசிலம்பட்டி: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர், வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்லம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் திரண்ட சங்கத்தினருக்கு மாவட்டச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சின்னச்சாமி, மார்க்சிஸ்ட் செயலாளர் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர். திட்ட மேலாளர் ஜெயராமன், ஒன்றிய அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததால் கலைந்தனர்.
26-Jul-2026