உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மார்ச் 6ல் பெண்களுக்கு திறன் போட்டிகள்

மார்ச் 6ல் பெண்களுக்கு திறன் போட்டிகள்

மதுரை : மதுரை சின்மயா தேவி குழு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு விராட்டிபத்து வி.வி.எம். மகாலில் 'மா சக்தி' எனும் பெண்களுக்கான பல்சுவை முகாம் மார்ச் 6 காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா ஆசியுரை வழங்குகிறார். செந்தமிழ்க் கல்லுாரி துணைமுதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, மகாத்மா பள்ளிமூத்த முதல்வர் பிரேமலதா பங்கேற்கின்றனர். பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த பல்வேறு போட்டிகள், கருத்தரங்கு, விவாத நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு உண்டு.விருப்பமுள்ளவர்கள் www.chinmayamission madurai.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 98424 30922.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை