உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறப்பு கிராம சபை கூட்டம்

சிறப்பு கிராம சபை கூட்டம்

திருமங்கலம், : திருமங்கலம் ஒன்றியத்தின் 38 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.கரிசல்பட்டி கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் குருவுலட்சுமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் சித்ராதேவி, ஒன்றிய உதவியாளர் தீபலட்சுமி முன்னிலை வகித்தனர்.கலைஞர் கனவு இல்ல பயனாளிகளை தேர்வு செய்து திட்டத்தை செயல்படுத்துவது, கிராம குடியிருப்பு வீடுகளில் பழுது நீக்க கணக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி செயலர் மலர்விழி தீர்மானங்களை வாசித்தார். உச்சப்பட்டியில் தலைவர் பிச்சையம்மாள் தலைமை வகித்தார். துணைத்தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் லோகன், திருமங்கலம் பி.டி.ஓ., வில்சன், ஏ.பி.டி.ஓ., கனிச்செல்வி பங்கேற்றனர். ஊராட்சி செயலர் ஈஸ்வரன் தீர்மானங்களை வாசித்தார்.மறவன்குளத்தில் தலைவர் ராமு தலைமை வகித்தார். துணைத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பற்றாளர் ரஜஸ் கலந்துகொண்டார். 15வது நிதிக்குழு மானியத்தில் தேர்வு செய்த பணிகளை செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி செயலாளர் திக்விஜயன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ