மேலும் செய்திகள்
நத்தம் ராயப்பர் சர்ச் விழா துவக்கம்
13-Aug-2024
மதுரை: மதுரை கீழவெளிவீதி செயின்ட் மேரீஸ் சர்ச்சில் வியாகுல அன்னையின் 182வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பேராயர் அந்தோணி பாப்புசாமி கொடியை அர்ச்சித்து ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்து கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றினார். செப்.16 வரை தினமும் மாலை 6:00 மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெறும். தினமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் சிறப்பு திருப்பலிகள், தியானம், நாடக நிகழ்ச்சிகள் நடைபெறும்.முக்கிய நிகழ்வாக தேர்பவனி செப்.14 மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. செப்.15 திருவிழா நிறைவு, நற்கருணை கொடி இறக்கம் நடைபெறும். ஏற்பாடுகளை பாதிரியார் ஹென்றி ஜெரோம், துணை பாதிரியார்கள் லெனின், ஜோலிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
13-Aug-2024