உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / -மாநில ஊசு போட்டி

-மாநில ஊசு போட்டி

மதுரை: கோவையில் கேலா இந்தியா சார்பில் பெண்களுக்கான மாநில அளவிலான ஊசு போட்டிகள் நடந்தன. இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த 8 மாணவிகள் பங்கேற்றனர்.இதில் சீனியர் 65 கிலோ எடைப்பிரிவில் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி மாணவி பி.சோபிகாதேவி வெண்கலம், சப் ஜூனியர் 14 வயது 42 கிலோ எடைப்பிரிவில் பஸ்கோஸ் பள்ளி மாணவி ஓவியாஸ்ரீ தங்கப்பதக்கம், 39 கிலோ எடைப்பிரிவில் காவியா ஸ்ரீ வெண்கலப் பதக்கம், மகாத்மா பள்ளி மாணவி மிதுல மாயா வெண்கல பதக்கமும் வென்றனர்.12 வயது 27 கிலோ எடைப்பிரிவில் பிஷ் ஸ்கூல் மாணவி ஷிவானி வெள்ளிப்பதக்கம் பெற்றார். இம்மாணவியரை பயிற்சியாளர் முத்துக்குமார், பாலசுப்ரமணி, பழனிகுமார், ரஞ்சித் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி