மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
02-Feb-2025
மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
27-Jan-2025
மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி மற்றும் ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் இணைந்து 30 வது ஆண்டு விளையாட்டு தின விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் சுஜாதா தலைமை வகித்தார். துணை முதல்வர் குரு பாஸ்கர் வரவேற்றார். உடற்பயிற்சித்துறை இயக்குனர் பாண்டியராஜன் ஆண்டறிக்கை வாசித்தார்.மதுரை காமராஜ் பல்கலை உடற்பயிற்சித்துறை இயக்குனர் (பொறுப்பு) ரமேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அவர் பேசியதாவது: விளையாட்டு மூலம் உடல், மனதை சிறப்பாக வைத்துக்கொள்ள முடியும். முழு மனதோடு விளையாடினால் மட்டுமே சாதிக்கலாம். சகிப்புத் தன்மையை கற்றுக் கொள்ள முடியும். மாணவர்கள் அற நெறியோடு செயல்பட வேண்டும் என்றார்.மாணவர்கள் சிலம்பாட்டம், கராத்தே, பிரமிடு, அலை நடனம் சாகசம் நிகழ்த்தினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ராக்கர்ஸ், சேலஞ்சர்ஸ், ஸ்பார்க்லர்ஸ், திரில்லர்ஸ் அணி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஸ்பார்க்லர்ஸ் அணி அதிக போட்டிகளில் வெற்றி பெற்று சுழற்கேடயம் வென்றது. டீன் பிரியா பங்கேற்றார். மாணவி லட்சுமி பிரியா நன்றி கூறினார்.
02-Feb-2025
27-Jan-2025