உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடியிருப்பு பகுதியில் கழிவுநீரால் அவதி

குடியிருப்பு பகுதியில் கழிவுநீரால் அவதி

மதுரை: மதுரை துரைச்சாமி நகர் பகுதி நமசிவாயம் நகர் முதலாவது தெருவில் கழிவுநீர் வெளியேறி சுகாதார கேடை ஏற்படுத்துகிறது.இப்பகுதியில் சாக்கடை அடைப்பால் கழிவுநீர் நிரம்பி ரோட்டில் வழிந்தோடுகிறது. அப்பகுதி காலியிடத்தில் தேங்கி நிற்கிறது. இதில் துர்நாற்றம் வீசுவதால் கொசுக்கள் பெருகி, சுகாதார கேடு ஏற்படுகிறது. 10 நாட்களாக பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கும் இக்குறைபாடு குறித்து உரியவர்களுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இப்பகுதியில் உள்ள பூங்கா பகுதியும் குப்பை கூளமாகவும், புதர்மண்டியும் கிடக்கிறது. அப்பகுதி முழுவதும் உள்ள கழிவுநீர்இங்கு தேங்கி குடியிருப்போரை அவதியடைய செய்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி