உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழைக்கு சேதமான நெற்பயிர் கணக்கெடுப்பு நிறைவு

மழைக்கு சேதமான நெற்பயிர் கணக்கெடுப்பு நிறைவு

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வட்டார மேலாண்மை அலுவலக பகுதிகளில் குறுவை சாகுபடியில் 162 எக்டேர் நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சமீபத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் பல நிலங்களில் நெற்கதிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். சேதப் பகுதிகளை திருப்பரங்குன்றம் வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் அலுவலர்கள் கணக்கெடுத்தனர். கணக்கெடுக்கும் பணி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.இதில் 2.73 எக்டேரில் நெற் கதிர்கள் சாய்ந்து பாழானது தெரிந்தது. இழப்பீட்டிற்காக சேதப் பகுதி விபரங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளை காட்டிலும்திருப்பரங்குன்றத்தில் பாதிப்பு குறைவு என உதவி இயக்குனர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ