உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்வியில் ஆன்மிகம் அவசியம் சுவாமி சிவயோகானந்தா பேச்சு

கல்வியில் ஆன்மிகம் அவசியம் சுவாமி சிவயோகானந்தா பேச்சு

மதுரை: ''மனிதரிடம் பணிவு கொடுக்கக் கூடியது ஆன்மிகம். கல்வியில் ஆன்மிகம் அவசியமாகிறது'' என சுவாமி சிவயோகானந்தா பேசினார்.மதுரையில் சின்மயா மிஷன் சார்பில் மகளிர் தின விழாவை முன்னிட்டு 'மா சக்தி' நிகழ்ச்சி நடந்தது. சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது:கல்வி என்பது தனி மனிதரின் பண்புகளை உயர்த்துவதாகவும், மனதை வலிமைபடுத்துவதாகவும் இருக்க வேண்டும். கல்வியை அறிவு என்ற ஒரு பகுதியாக மட்டும் பார்க்கின்றனர். பண்பு, துாய்மை, ஒழுக்கம் இல்லாவிட்டால் உயர்வான கல்வியை கற்றாலும் பலன் இல்லை. அறிவு மட்டுமே நம்மை துாய்மைப்படுத்தாது.மனிதரிடம் பணிவு கொடுக்கக்கூடியது ஆன்மிகம். அதனாலயே கல்வியில் ஆன்மிகம் அவசியமாகிறது. கல்வி எப்படி இருக்க வேண்டும் என பார்க்கிறோம். ஆனால் கல்வி கற்பவர்கள் எத்தகைய குணங்களுடன் இருக்க வேண்டும் என பார்ப்பதில்லை. அனைவரிடமும் சக்தி இருக்கிறது. அது வெளிப்பட நாம் துாய்மையானவர்களாக இருந்தால் நம்மிடம் இருக்கும் ஆற்றல் எல்லையற்றதாக இருக்கும் என்றார்.சிறப்பு விருந்தினராக மகாத்மா பள்ளி நிறுவனர் பிரேமலதா, செந்தமிழ்க் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி பங்கேற்றனர். சின்மயா மிஷன் பொன்மீரா தலைமையில் கருத்தரங்கம் நடந்தது. பூக்கோலம், பூ கட்டுதல், அலங்காரம், வளையல் கைவினைப் பொருட்கள் போட்டி நடந்தது. கிருஷ்ணா நகை மாளிகை நிறுவனத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ